Posts

Showing posts from April, 2016

ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையற்ற எஸ்எம்எஸ்களை தடுக்க…

Image
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில், மிக மோசமான சொற்கள் அடங்கிய, பாலியல் தொந்தரவு தரும் வகையிலான குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்திருக்கும். இவற்றை அனுப்பிய எண்களும் இருக்கும். ஆனால், இந்த எண்களை அழைத்து ஏன் இவ்வாறு மோசமான செய்திகளை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டால், ‘அனுப்பவே இல்லை’ என்றும், தொடர்ந்து பேசினால், மிக மோசமான சொற்களால் திட்டுக்களும் கிடைக்கும். பலர், இந்த அவமானத்தை வெளியில் சொல்ல தயங்கி, அது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். காவல் துறைக்குச் சென்றால், பலருக்கு இது தெரிந்துவிடும் என்ற பயமும் இருக்கும். இதற்கு நாமே தீர்வு காணலாம். உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில், இணையத் தொடர்பின் வழியாக, Google Play store (Android market) செல்லவும். அல்லது போன் பிரவுசர் வழியாக play.google.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். Google Play store அடைந்தவுடன் அதில் ‘‘SMS blocker’’ என டைப் செய்து தேடவும். கூகுள் பிளே ஸ்டோரில் எஸ்.எம்.எஸ். தடுக்க கிடைக்கும் பல புரோகிராம்களில் SMS Blocker – Clean Inbox என்ற ஒன்று காட்டப்படும். அல்லது இந்த முகவரியில் இது மட்டுமே காட்...

அழிக்கவே முடியாத ‘சூப்பர்மேன் மெமரி கிறிஸ்டல்ஸ்’ குறுந்தகடு; 360 டெரா பைட் வரை சேமிக்கும்

Image
சுமார் 360 டெரா பைட் வரை சேமிக்கும் வசதி கொண்ட அழியா குறுந்தகடை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் பிரிட்டனின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத வகையில் குறுந்தகடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுந்தகடு, சிறிய நாணயத்தின் அளவே உள்ளது. எனினும், இதில் 360 டெராபைட் (1 டெரா பைட் என்பது 100 ஜிகா பைட்) அளவிலான மின்னணுத் தகவல்களைப் சேமித்து வைக்கமுடியும். லேசர் கதிர் மூலம் அதிவேகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த குறுந்தகட்டில் தகவல்கள் பதிவு செய்யவும், மீண்டும் பெறவும் முடியும். இதன் நவீன தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு தகவல் புள்ளியும் 5 மைக்ரோமீட்டர்(ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பகுதி) இடைவெளியில் அமைந்துள்ளாதால், மிகச் சிறிய இடத்திலேயே அதிக தகவல்களைப் பதிவு செய்ய முடிகிறது. ’சூப்பர்மேன் மெமரி கிறிஸ்டல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறுந்தகடு 1,000 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1...

200 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ஒயர்லெஸ் பென்டிரைவ்; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

Image
பிளாஷ் ஸ்டோரேஜ் கருவி விற்பனையில் முன்னிலையில் இருந்து வரும் ‘சான்டிஸ்க்’ நிறுவனம் இந்தியாவில் புதிய ஒயர்லெஸ் பென்டிரைவ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 200 ஜிகாபைட் சேமிப்புத்திறன் கொண்ட இந்த பென்டிரைவை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் டிவி என அனைத்துவிதமான டிஜிட்டல் கருவிகளுடனும் பயன்படுத்தலாம். பாஸ்வேர்டு பாதுகாப்புடன் வை-ஃபை மூலம் இந்த பென்டிரைவை கனெக்ட் செய்வதால் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அதிவேகமாக டிரான்ஸ்பர் செய்ய முடியும். இதற்காக பிரத்யேகமாக ‘ஆப்’ ஒன்றையும் ‘சான்டிஸ்க்’ வழங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கடைகளிலும் விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒயர்லெஸ் பென்டிரைவை பயன்படுத்த இண்டர்நெட் அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Computer Service